யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத குழுவொன்று வீடொன்றுக்குள் புகுந்து அட்டகாசம்!

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் புகுந்த மர்ம கும்பம் ஒன்று சரமாரியான தாக்குதல் மேற்கொண்டதால் அந்தப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது.

தென்மராட்சி, மாசேரி பகுதியில் சுமார் 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று, நேற்றிரவு தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

மண் அள்ளப் பயன்படுத்தப்படும் சவள், கொட்டன் தடிகள், இரும்புக் கேடர்களுடன் தாக்குதல் குழு வீட்டினுள் நுழைந்து அட்டகாசம் செய்துள்ளது.

வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் மீது தீ வைத்ததுடன் வீட்டிற்கு மேல் ஏறி வீட்டின் கூரைகளையும் அடித்து நொருக்கியுள்ளனர்.

தனியார் போக்குவரவு பேருந்து ஒன்றின் உரிமையாளர் ஒருவரின் வீட்டின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதி மக்கள் ஒன்றுகூடியமையினால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

மக்கள் ஒன்றுகூடியமையினால் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோடி உள்ளனர்.

Latest Offers

loading...