ஆசிரியர்களின் போராட்டத்தால் வடக்கின் அனைத்து பாடசாலைகளிலும் கற்றல் நடவடிக்கைகள் முடக்கம்!

Report Print Sumi in சமூகம்

நாடளாவிய ரீதியில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று சுகவீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் வடக்கு மாகாணத்திலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதிய இணைப்பு...

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளின் வழமையாக வருவதை போன்ற மாணவர்களின் வருகை காணப்பட்டுள்ளது.

இருப்பினும் ஆசிரியர்களின் வருகையின்மை காரணமாக மாணவர்கள் வகுப்பறைகளில் கற்றல் நடவடிக்கைகள் இல்லாது இருந்துள்ளனர்.

சில பாடசாலைகளில் மாணவர்கள் ஆசிரியர்களின் வருகையின்மை காரணமாக உடனடியாகவே மாணவர்கள் திரும்பி சென்றுள்ளனர்.

செய்தி - மோகன்

யாழ்ப்பாணம்

யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் உள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிளிநொச்சி

கிளிநொச்சியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 90 வீதத்திற்கு அதிகமான அதிபர், ஆசிரியர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட ஆசிரியர் சேவை சங்க செயலாளர் கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கிளிநாச்சி மாவட்ட ஆசிரிய சேவைச் சங்கத்தினால் கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

5 நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடும் அதிபர், ஆசிரியர்களின் சுகவீன விடுப்பு போராட்டத்திற்கு ஆதரவாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த போராட்டத்தில் அதிபர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

செய்தி - சுமன் மற்றும் யது

வவுனியா

வவுனியாவிலும் ஆசிரியர்கள் சுகவீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமையால் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் செல்லவில்லை.

அத்துடன் மாணவர்களும் பாடசாலைகளுக்கு செல்லாமையால் பாடசாலைகள் வெறிச் சோடிக்காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்தி - திலீபன்

மன்னார்

மன்னாரில் சில பாடசாலைகளுக்கு மாணவர்கள் சென்றதோடு, ஆரம்ப பிரிவு மாணவர்களும், மாணவர்களை அழைத்துச் சென்ற பெற்றோரும் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.

செய்தி- ஆஷிக்

குறித்த பகுதிகளில் முன்னெடுக்கபட்ட சுகவீன விடுப்பு போராட்டங்கள் காரணமாக பாடசாலையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளிற்கு ஆசிரியர்கள் வருகை தராமையால் மாணவர்களும் வருகை தரவில்லை.

இதன் காரணமாக பாடசாலைகள் பலவும் வெறிச்சோடிக் காணப்படுகின்றதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.