அரச பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று சுகவீன விடுமுறை போரட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த போராட்டம் மலையகத்தின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மலையகத்திலுள்ள பல பாடசாலைகளில் ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட்டு பாடசாலைக்கு சமூகம் அளிக்காததால் மாணவர்களும் பாடசாலைக்கு சமூகம் அளித்திருக்கவில்லை.
எனினும் சில ஆசிரியர்கள் சேவைக்கு சமூகமளித்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
ஹட்டனில் பொஸ்கோ கல்லூரி, ஹைலண்ஸ் கல்லூரி, ஸ்ரீபாத சிங்கள மகா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு மற்றும் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்தமையால் பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.