கந்தளாயில் மூன்று வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்! காப்பாற்ற போராடும் வைத்தியர்கள்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கந்தளாய் பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் போத்தல் மூடி தொண்டைக்குள் சிக்கியதில் ஆபத்தான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.அலீம் என்ற மூன்று வயதுடைய சிறுவனே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த குழந்தை மூடிகளை வைத்து விளையாடிக்கொண்டிருந்த நிலையிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கந்தளாய் தள வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை,பாதிக்கப்பட்ட குழந்தையின் தொண்டைக்குள் சிக்கிய மூடியினை எடுப்பதற்கான சிகிச்சை நடவடிக்கைகளை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.