மட்டக்களப்பில் புகையிரதத்தில் மோதுண்டு குடும்பஸ்தரொருவர் பலி!

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் நேற்றிரவு மட்டக்களப்பு - ஓட்டமாவடி அரபாநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி, அரபாநகர் ஹம்ஸா வீதியைச் சேர்ந்த முகம்மது பௌமி அனீஸ் முகம்மட் என்ற 28 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வீட்டிற்கு அருகில் உள்ள அரபாநகர் புகையிரத கடவையில் கையடக்கத் தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருந்த வேளையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு குற்றத்தடுப்பு பொலிஸார், வாழைச்சேனை பொலிஸாருடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.