மட்டக்களப்பில் மண் கொள்ளையர்கள் கைது

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பலபகுதிகளிலும் மண் அகழ்வில் ஈடுபட்ட வந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த மூவர் கனரக வாகனம் மற்றும் உழவு இயந்திரத்துடன் இன்று வட்டார வன உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை வன திணைக்களத்திற்கு சொந்தமான குடும்பிமலை காட்டுப்பகுதியில் மாதுறுஓயா ஆற்றில் மண் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரத்தினபுரி பகுதியை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்

வாகரை வெள்ளாமைச்சேனை கோறளை வன காட்டுப்பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உழவு இயந்திரம் மற்றும் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை வட்டார வன பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோத மரம் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு வட்டார வன உத்தியோகத்தர்களும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாதுறுஓயா ஆற்றில் தொடர்ச்சியாக சட்டவிரோத முறையில் மண் அகழ்வில் மண் கொள்ளையர்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.