கடவுச்சீட்டு இன்றி தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜைகள் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

கடவுச்சீட்டு மற்றும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த இரண்டு பாகிஸ்தான் பிரஜைகள் பதுளை எல்ல நகரில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

27 மற்றும் 42 வயதான பாகிஸ்தான் பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நபர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கடவுச்சீட்டு மற்றும் விசா இன்றி இலங்கையில் வசித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர். எல்ல பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.