ஹற்றன் -நுவரெலியா வீதியில் வான் விபத்து! குழந்தை உட்பட மூவர் படுகாயம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹற்றன் -நுவரெலியா பிரதான வீதியில் இன்று முற்பகல் கொட்டகலை வைத்தியசாலைக்கு முன்பாக வான் ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்தவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

குறித்து மூவரும் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த மூவரில் சிறு குழந்தை ஒன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹற்றன் பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி ஐஸ் கிரீம் வகைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த வானே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாகனத்தை பெண் சாரதி ஒருவரே செலுத்தியுள்ளதாகவும், அவருக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.