கடமை நேரத்தில் ஆபாச படம் பார்த்த தொழிற்சங்க தலைவர் பணி இடைநீக்கம்!

Report Print Steephen Steephen in சமூகம்

பிரதான அரச நிறுவனம் ஒன்றின் தொழிற்சங்க தலைவர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கடமை நேரத்தில் ஆபாச திரைப்படம் பார்த்தமை உட்பட சில குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தொழிற்சங்க தலைவர் கடமை நேரத்தில் ஆபாச படம் பார்ப்பதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து மேற்கொண்ட பரிசோதனையின் பின்னர் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த தொழிற்சங்க தலைவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இலங்கை முதலீட்டுச் சபையின் தொழிற்சங்க தலைவர் எனவும், அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான சரக்கு முனையத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.

இந்த நபர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர் எனக் கூறி, நிறுவனத்தில் அவருக்கு சட்ட ரீதியாக உரிமையில்லாத வாகன வசதி, தொலைபேசி போன்ற பல வசதிகளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.