வீட்டில் இருந்து சென்றவர் ஆற்றில் சடலமாக மீட்பு

Report Print Steephen Steephen in சமூகம்

வீட்டில் இருந்து வெளியில் சென்றிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மஸ்கெலிய ஓயா ஆற்றில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஸ்கெலியா பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான வேலாயுதம் சூரியகுமார் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் இன்று காலை 7 மணியளவில் வீட்டில் இருந்து சென்றுள்ளார். வீட்டில் இருந்து சென்றவர் திரும்பி வரவில்லை என்பதால், உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டு, உறவினர்கள் அவரை தேடியுள்ளனர்.

அப்போது மவுசாகலை நீர் தேக்கத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் மஸ்கெலியா ஓயாவில் மிதந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் பொலிஸார் வந்து சடலத்தை மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் பாதணிகள், சாரம் என்பன மஸ்கெலியா ஓயா ஆற்றுக்கு அருகில் காணப்பட்டுள்ளது.

இந்த நபர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது குளிக்க சென்ற போது தண்ணீர் மூழ்கி இறந்தாரா என்ற கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Latest Offers

loading...