கொரோனா வைரஸின் தாக்கம்.. இறந்தோர் எண்ணிக்கை உயர்கிறது! இலங்கை தொடர்ந்தும் நடவடிக்கை

Report Print Ajith Ajith in சமூகம்

புதிதாக பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து இலங்கையில் தொடர்ந்தும் கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் தொடர்ந்தும் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுவதுடன் 14 நாட்கள் கண்காணிப்பில் பார்க்கப்படும் பொறிமுறையில் செயற்படுத்தப்படுகிறது.

ஏற்கனவே இந்த நடைமுறை சீனா,தென்கொரியா, இததாலி,சிங்கப்பூர்,ஜப்பான், ஹொங்கொங் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விடயத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நேற்று மாலை 5 கொரோனவைரஸ் சந்தேகத்தில் ஐந்து பேர் வைத்தியசாலைகளில் சிகிச்கையளிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் இருவர் வெளிநாட்டினர் ஆவர். இதேவேளை வெளிநாட்டு செய்திகளின்படி சீனாவில் இந்த நோயினால் இறந்தோரின் எண்ணிக்கை 2700 ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் 19 பேர் இறந்துள்ளனர்.