யாழ். புத்தூர் பகுதியில் குழப்ப நிலை! பெருமளவு பொலிஸார் குவிப்பு

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணம் – புத்தூர் மேற்கு ஹிந்துசிட்டி மயானத்தில் சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்ட முயற்சியால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மயானப் பகுதியில் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ஹிந்துப்பிட்டி மயானத்தில் சடலம் எாிப்பதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தமையினால் இந்த நிலை ஏற்பட்டது.

கலைமதி கிராமத்தில் உள்ள மயானத்தை அகற்றுமாறு அதனை அண்டி வாழும் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். எனினும் மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.