போராட்டத்தில் குதித்த தீவக மீனவர்கள்

Report Print Sumi in சமூகம்

அத்துமீறிய, இந்திய இழுவைப் படகு தொழிலை தடை செய்ய வலியுறுத்தி தீவக மீனவர்கள் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

யாழ். பண்ணைப் பகுதியில் இருந்து காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டமானது நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் மகஜர் கையளிக்கப்பட்டதன் பின்னர் அங்கிருந்து காங்கேசன்துறை வீதி வழியாக கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், அமைச்சரின் பிரதிநிதிகளிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்து இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்திற்குச் சென்று அங்கும் தூதுவரிடம் மகஜர் கையளித்தனர்.

இந்த போராட்டத்தின் போது, இந்திய இழுவைப் படகின் அத்துமீறலால், தொழில்கள் பாதிக்கப்படுவதுடன், எமது பிள்ளைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படுகின்றதாகவும், தெரிவித்துள்ளனர்.

ஆகையினால், இந்திய இழுவைப் படகின் அத்துமீறிய தொழில் முறையை தடை செய்யுமாறும், வளங்களை சூரையாடுவதை தடை செய்யுமாறும், வேண்டுகோள் விடுத்ததுடன், வாழ்வாதாரம் இன்றி, எமது வாழ்க்கை கேள்விக்குறியாக இருப்பதாகவும் சுட்டிக் காட்டினார்கள்.