முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது பேரப்பிள்ளையை தேடி போராடி வந்த தாயொருவர் மரணம்!

Report Print Varunan in சமூகம்

காணாமலாக்கப்பட்ட தனது பேரப்பிள்ளைக்கு நீதிகோரி கடந்த மூன்று வருடங்களாக முல்லைத்தீவில் இடம்பெற்று வரும் தொடர் போராட்டத்தில் பங்கெடுத்திருந்த தாயார் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இதன்போது முகமாலையை பிறப்பிடமாகவும்,மந்துவில் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட செல்வம் சிவபாக்கியம் என்ற தாயே நேற்று உயிரிழந்துள்ளார்.

தனது மகளின் மகனான அல்பிரட் தினு என்ற தனது பேரப்பிள்ளை 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது வட்டுவாகல் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில், ஏக்கத்தோடு மூன்று ஆண்டுகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரையான காலப்பகுதியில் 60 க்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.