முல்லைத்தீவில் 8 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

Report Print Vanniyan in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் நேற்றைய தினம் 6 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சுதந்திரபுரம் பகுதியில் சந்தேகத்தின் பேரில் மூவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் அவர்களை அழைத்து சென்று சுண்டிக்குளம்கடற்கரைபகுதியில மண்ணினுள் புதைத்து வைத்திருந்த நிலையில் சுமார் 6 கிலோ கஞ்சாவினை மீட்டுள்ளனர்.

அவர்கள் மூவரையும் கைது செய்துள்ளதுடன் அவர்களின் உந்துருளிகள் இரண்டினையும் பொலிசார் கைப்பற்றியுள்ளார்கள்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி எட்டு இலட்சம் தொடக்கம் பத்து இலட்சம் வரை எனவும் குறித்த நபர்கள் வவுனியாவினை சேர்ந்த 41, 39, 26 ஆகிய வயதுகளையுடைய குடும்பஸ்தர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.