முல்லைத்தீவு மின் பாவனையாளர்களை அச்சுறுத்தும் மின்சாரப்பட்டியல்

Report Print Theesan in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மின்பாவனையாளர்கள் தமது பாவனைக்கு அதிகளவான மின் அலகுகளுக்கு பணம் அறவிடப்பட்டு வருவதாகவும் இவ்வாறான நடவடிக்கை காரணமாக வறுமையிலுள்ள குடும்பங்கள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மின்பாவனையாளர்கள் தமது பாவனைக்கு அதிகளவான மின் அலகுகளை மின்சார சபை ஊழியர்களினால் அறவிடப்படுகின்றது. இதன் காரணமாக அதிக பணம் செலுத்திவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மின்மானிக்கும் மின்சாரப்பட்டியலுக்கும் இடையே பல்வேறு அலகுகள் வித்தியாசம் காணப்படுகின்றன. இம் மாதம் மின்பாவனையாளர் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற மின்சார சபை ஊழியர்கள் மின்மானியில் காணப்படும் மின்பாவனை அலகிற்கும் மின்சாரப்பட்டியலில் காணப்படும் அலகிற்கும் பல்வேறு வித்தியாசமான நிலை காணப்படுகின்றதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மின் பாவனை மானியிலிருந்து மேலதிகமாக 23 அலகுகளுக்கு மின்சாரப் பாவனையாளர் பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவ்வாறு மின்சார சபை ஊழியர்களின் நடவடிக்கையினால் தமது மின்சாரப்பட்டியலுக்கு அதிக பணம் அறிவிடப்பட்டு வருவதாகவும் கூலிவேலைகள், வறுமையிலுள்ள மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விடயம் குறித்து தகவல் பெற்றுக்கொள்வதற்காக முல்லைத்தீவு மாவட்ட மின்சார பொறியியலாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோது,

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் எங்களுக்கு முறையிட முடியும். மின்பட்டியலில் தொலைபேசி இலக்கம் காணப்படுகின்றது. அதனுடன் எங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் ஊடகங்களின் கேள்விகளுக்கு அலுவலக ரீதியாக பதிலளிக்க முடியாது என்று மேலும் தெரிவித்துள்ளார்.