மக்கா மதீனாவுக்கு உம்ரா கடமைகளுக்காக வெளிநாட்டவர்கள் பயணிக்க தடை

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக மக்கா மதீனாவுக்கு உம்ரா கடமைகளுக்காக வெளிநாட்டவர்கள் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் இந்த நோய் தொற்று பாரியளவில் பரவி வருவதை அடுத்தே இந்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

உம்ரா கடமைகளுக்காக 2019ஆம் ஆண்டில் மாத்திரம் 7.5 மில்லியன் யாத்திரிகர்கள் மக்கா மதீனாவுக்கு சென்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக சவூதி மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் பாதிக்கப்படவில்லை.

எனினும் மத்திய கிழக்கின் ஏனைய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குவைத்திலும், பஹ்ரெய்னிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதேவேளை எதிர்வரும் ஜூலை மாதம் ஹஜ் யாத்திரை ஆரம்பமாகவுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் அடிப்படையில் இந்த தடை அமையும் என்று சவூதியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.