வட மாகாண சுகாதார தொண்டர்கள் போராட்டம்

Report Print Sumi in சமூகம்

தமக்கு நிரந்தர நியமனம் கிடைவில்லை என தெரிவித்து வட மாகாணத்தில் சுகாதார தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டம் நேற்று பண்ணை சுகாதார கிராம முன்றலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டு, தேர்வில் தெரிவு செய்யப்பட்டு, கடமையை பொறுப்பேற்குமாறு அழைப்பு விடப்பட்ட பின்னர் நியமனம் வழங்கப்படாத சுகாதார தொண்டர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த சுகாதாரத் தொண்டர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி நீண்டகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.