வவுனியா செட்டிக்குளத்தில் வீடு புகுந்து மர்ம நபர்கள் அட்டகாசம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, செட்டிகுளம் சின்னத்தம்பனை கிராமத்தில் வீடு ஒன்றினுள் புகுந்த மர்மநபர்கள் வீட்டிலிருந்த பெண்களை தாக்கி வீட்டில் இருந்த பொருட்களையும் முழுமையாக சேதப்படுத்தியுள்ளனர்.

நேற்று அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும்தெரியவருகையில்,

செட்டிகுளம் சின்னத்தம்பனை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த மர்மநபர்கள் வீட்டில் இருந்த தாய் மற்றும் மகளை கடுமையாக தாக்கியதோடு வீட்டிலிருந்த பொருட்கள் முழுவதையும் சேதப்படுத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த குடும்ப பெண் அயலவர்களின் உதவியுடன் செட்டிகுளம் பிரதேச பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப பெண் கணவனை இழந்து தனது பிள்ளைகளுடன் தனிமையில்வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.