சட்டவிரோத மண்ணகழ்வு விடயத்தை வெளியிட்டவருக்கு அச்சுறுத்தல்!

Report Print Kumar in சமூகம்

ஏறாவூர்பற்றில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் ஊடக சந்திப்பு மேற்கொண்டு உண்மைகளை வெளிக்கொணர்ந்தமைக்காக தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டடுள்ளதாக சித்தாண்டியைச் சேர்ந்த சிவானந்தன் பவானந்தன் என்பவர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு மேற்கொள்வது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் மற்றும் ஏறாவூர்ப் பற்றுப் பரதேச சபை உறுப்பினர் முரளிதரன் ஆகியோருடன் இணைந்து மட்டு ஊடக அமையத்தில் கடந்த திங்கட் கிழமை ஊடக சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது.

அச்செய்தி வெளியானதைத் தொடர்ந்து சட்டவிரோத மண் அகழ்வினை மேற்கொள்ளும் குழுவினைச் சேர்ந்த வேல்நாயகம் விஜயகாந் என்பவர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும், இது தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் பொலிஸ் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.