நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான பயணத்தடை நீக்கம்!

Report Print Ajith Ajith in சமூகம்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை நீதிமன்றம் விலக்கிக்கொண்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜெயரதன் இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளார்.

இந்தப் பயணத்தடை நீக்கம் 2020 ஜூலை மாதம் 23ம் திகதி வரை அமுலில் இருக்கும் என்று நீதிவான் அறிவித்துள்ளார்.

கோவர்ஸ் கோப்பரேட் சேவிர்ஸ் நிறுவனத்தின் ஊடாக 30 மில்லியன் ரூபாய் பணச்சலவை செய்த குற்றச்சாட்டின் பேரில் நாமல் ராஜபக்ச உட்பட்ட நால்வர் மீது சட்டமா அதிபர் குற்றப்பத்திரிக்கைகளை ஏற்கனவே தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.