இலங்கை மீனவர்கள் மீது இந்திய கடற்படையின் அதிரடி நடவடிக்கை

Report Print Thileepan Thileepan in சமூகம்

எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் ஐவரை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை - தலைமன்னார் பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்ற இலங்கை மீனவர்களே படகுடன் இந்திய கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் கடற்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஐந்து மீனவர்கள் இந்திய கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்து கொண்டிருந்த போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுப்பட்டு வந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து ஹெலிகாப்டர் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுப்பட்டதாக வழக்கு பதிவு செய்து 5 மீனவர்களையும், அவர்களது மீன்பிடி பைபர் படகையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யபட்டுள்ள மீனவர்கள் விசாரணையின் பின்னர் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து எமது பிராந்திய செய்தியாளர் மன்னார் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,

குறித்த மீனவர்கள் இன்று காலை மன்னார் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றுள்ளனர். மீனவர்கள் வழக்கமாக காலை நேரத்தில் மீன் பிடிக்கச் சென்று மாலை நேரத்தில் கரை திரும்புவார்கள். இவர்கள் ஐந்து பேரும் சுருக்கு வலை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள்.

இவர்கள் கடலில் மீன்கள் கூட்டமாக எங்கு உள்ளதோ அந்த பகுதியில் மட்டும் வலைகள் மற்றும் வெடி பொருட்களை பயன்படுத்தி மீன் பிடிப்பார்கள் அவ்வாறு மீன்கள் கிடைக்காததால் தவறுதலாக எல்லை தாண்டி இந்திய கடற்பரப்பிற்குள் வந்ததாக அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் ஐவரை காணவில்லை என மன்னார் மீன் வளத்துறையினர் இலங்கை கடற்படையிடம் புகார் அளித்துள்ளது.

மேலும் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் 5 பேராக படகில் கடலுக்குள் செல்லமாட்டார்கள் எனவே இவர்கள் மீனவர்கள் என உறுதி செய்யப்படுவதாக கூறியுள்ளார்.