வவுனியா விவசாய பணிப்பாளரின் இடமாற்றத்தில் இழுபறி நிலை!

Report Print Theesan in சமூகம்

வவுனியா விவசாய திணைக்களத்தின் விரிவாக்கல் பிரிவின் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஏ. சகிலாபானுவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில் இழுபறி நிலை காணப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

சகிலாபானு பிரதி மாகாண விவசாய பணிப்பாளராக கடமைகளை 2018 ம் ஆண்டு கடமைகளை பெறுப்பேற்றிருந்தார்.

இதன்போது சில அமைப்புக்கள் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டிருந்த போதிலும் அவர் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வவுனியா விவசாய பண்ணையில் இடம்பெற்ற பல்வேறு முறைக்கேடான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், சில உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றங்களும் விசாரணைகளும் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை 2019 ம் ஆண்டு வவுனியா விவசாய பண்ணையில் அதிக வருமானமும் பதிவிடப்பட்டிருந்த நிலையில், தற்போது குறித்த பணிப்பாளருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள இவ்விடமாற்றத்தினை அடுத்து புதிய பணிப்பாளர் இன்று கடமைகளை பெறுப்பேற்க அலுவலகத்திற்கு வருகை தந்த நிலையில், அவரிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படாத நிலை காணப்பட்டு வருகின்றது.

தற்போது பணிப்பாளராக உள்ள சகிலாபானு தனது இடமாற்றம் தொடர்பாக மேன்முறையீடு செய்துள்ளமையினாலேயே புதிய பணிப்பாளரிடம் பொறுப்புக்களை ஒப்படைக்க மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை புதிய பணிப்பாளராக அருந்ததி வேல்சிவானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.