1981 - 1991 பகுதிகளில் இலங்கையில் நடந்த சம்பவங்கள்! இரகசியங்களை அறிந்த சுவிஸ்

Report Print Ajith Ajith in சமூகம்

1981ஆம் ஆண்டு முதல் 1991ஆம் காலப்பகுதியில் இலங்கையில் இருந்து குழந்தைகள் சட்டரீதியற்ற வகையில் தத்தெடுக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து சுவிஸ் நாட்டின் அதிகாரிகள் அறிந்து வைத்திருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் இன்போ என்ற இணையத்தளம் இதனை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சூரிச் பல்கலைக்கழகம் தமது அறிக்கையை நேற்று சுவிட்ஸர்லாந்தின் நீதி மற்றும் காவல்துறை அலுவலகத்தில் கையளித்தது.

இந்த அறிக்கையை தயாரித்தவர்களில் ஒருவரான பேராசிரியர் நட்ஜா ரம்சாவூர் தத்தெடுக்கும் குழந்தைகள் தொடர்பில் சுவிட்ஸர்லாந்தில் இயங்கும் பொது கண்காணிப்பு பிரிவு உரிய இந்த சம்பவங்களின்போது உரிய வகையில் செயற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அந்தபிரிவுகளின் அதிகாரிகள் குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதற்கான தேவைப்பாடுகளைக் கூட பரிசோதிக்கவில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வறுமை மற்றும் தாய் தந்தையர்களை தெரியாத குழந்தைகனே தத்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் 1970-1980 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் இலங்கையில் இருந்து 11ஆயிரம் குழந்தைகள் ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்களால் தத்தெடுக்கப்படடுள்ளன. இதில் 700 குழந்தைகள் சுவிட்ஸர்லாந்தின் பெற்றோரால் தத்தெடுக்கப்பட்டன.