நந்திக்கடல் வெளியில் மரநடுகை வேலைத்திட்டம்!

Report Print Vanniyan in சமூகம்

முல்லைத்தீவு நந்திக்கடல் வெளி பகுதியில் மரம் நடுகை வேலைத்திட்டம் கரைதுறைப்பற்று பிரதேச சபையால் முன்னெடுக்கப்பட்டுள்ளது .

முல்லைத்தீவு - மாங்குளம் வீதியில் உள்ள மஞ்சள் பாலத்துக்கு அண்மையாக நந்திக்கடல் வெளியில் இன்றைய தினம் நூற்றுக்கணக்கான மருது மரங்கள் நாட்டி வைக்கப்பட்டுள்ளன .

தனியார் நிறுவனம் ஒன்றின் அனுசரணையில் கரைதுறைப்பற்று பிரதேச சபையால் இந்த வேலை திட்டம் முன்னெடுக்கபட்டுள்ளது.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கனகேஸ்வரன், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கனகரத்தினம், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் தவராசா, வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் சிவநேசன், பிரதேச சபை உறுப்பினர்கள், இராணுவ அதிகாரிகள், பொலிஸார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு மரங்களை நாட்டி வைத்துள்ளனர்.