இந்திய சுற்றுலாத்துறை அமைச்சினால் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்!

Report Print Ajith Ajith in சமூகம்

இந்திய சுற்றுலாத்துறை அமைச்சு சுற்றுலாவை மேம்படுத்தும் முகமாக பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.

இதன்படி புதுச்சேரியின் காரைக்கால் மற்றும் யாழ்ப்பாணத்துக்கான சேவைகள் நடத்தப்படவுள்ளன.

இதன்போது 56 கடல்மைல் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மன்சுக் மன்டாவியா இந்த தகவலை நேற்று புதுச்சேரியில் வைத்து வெளியிட்டார்.

இந்த பயணிகள் கப்பல் சேவை இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் ஆரம்பமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பயணத்துக்கான கட்டணம் இந்திய ரூபாயில் 6500 ரூபா முதல் 7000 ரூபாவாக இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து தமிழர்களும் சிங்களவர்களும் இந்தியாவுக்கு சுற்றுலாவுக்காக வருகின்றனர் என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவின் தனுஸ்கோடிக்கும் இடையில் முன்னர் பயணிகள் கப்பல் சேவை இடம்பெற்று வந்தது.

எனினும் இலங்கையில் ஏற்பட்ட தமிழர்களுக்கு எதிரான 1983 கலவரத்தின்பின்னர் இந்த சேவையை மத்திய அரசாங்கம் நிறுத்திவிட்டது.