பம்பலப்பிட்டியில் சற்று முன்னர் தீ விபத்து

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பு, பம்பலப்பிட்டியில் நிர்மாணப்பணியில் உள்ள கட்டடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

ஆர்.ஏ டி மெல் மாவத்தையில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் புதிய கட்டடத்தொகுதியிலேயே அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2 மணியளவில் குறித்த கட்டடத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயினை கட்டுப்படுத்துவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.