இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்னால் தனி நபர் போராட்டம்

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்னால் தனி ஆள் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது.

இந்த தூதரகத்துக்கு முன்னால் இலங்கையின் தேசியக்கொடியை ஏந்திய வண்ணம் ஒருவர் போராட்டம் ஒன்றை நடத்தினார்.

இலங்கையின் இராணுவததளபதி ஷவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா நாட்டுக்குள் பிரவேசிக்க விதித்துள்ள தடையை ஆட்சேபித்தே இந்த ஆர்ப்பாட்டத்தை அவர் மேற்கொண்டார். எனினும் இவர் யார் என்ற விடயம் தெரியவரவில்லை.