களனி பல்கலைக்கழகத்தின் சிசிடிவி கண்காணிப்பு கருவிகளை அகற்றிய மாணவர்களுக்கு விளக்கமறியல்

Report Print Ajith Ajith in சமூகம்

களனி பல்கலைக்கழகத்தின் சி.சி.டி.வி கண்காணிப்பு கருவியை அகற்றிய சம்பவத்தில் நேரடியாக தொடர்புடைய நான்கு மாணவர்களும் மார்ச் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மஹர நீதிவான் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.

கடந்த 24ம் திகதியன்று மாணவர்கள் குழுவொன்று பாதுகாப்பு நோக்கங்களுக்காக பொருத்தப்பட்டிருந்த சீசீடிவி கருவிகளை அகற்றியுள்ளனர்.

ஏற்கனவே இதனை பொருத்த வேண்டாம் என்று மாணவர் ஒன்றியம் கேட்டிருந்தது. தம்மை கட்டுப்படுத்துவதற்காகவே இது பொருத்தப்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனினும் இதனை பல்கலைக்கழக நிர்வாகம் பொருட்படுத்தவில்லை.இதனையடுத்தே அதனை மாணவர்கள் அகற்றியுள்ளனர்.

இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்ட 25 மாணவர்களுக்கு இரண்டு வருட வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.