பொதுத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பத்து ஆசனங்களை கைப்பற்றும் : அப்துல்லா மஹ்ரூப் உறுதி

Report Print Mubarak in சமூகம்

எதிர்வருகின்ற பொதுத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பத்து ஆசனங்களை கைப்பற்றும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை - கந்தளாய் , பேராறு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பூங்காவை இன்று திறந்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கந்தளாய் பிரதேசத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான வேலைத்திட்டங்களை எமது கட்சியின் தேசியத் தலைவரின் நிதியின் மூலமும் பல்வேறு வகையான சேவைகளை மேற்கொண்டுள்ளோம்.

நாட்டில் இனவாத செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் அத்துரலிய ரத்ன தேரர் போன்றோர் முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை பறிப்பதற்கான தனிநபர் பிரேரணைகளைத் தான் அப்போது நாடாளுமன்றத்தில் சமர்பித்தனர்.

தற்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரின் மனைவியிடம் பத்து மணித்தியாலயங்களுக்கு மேல் விசாரித்து வருகின்றார்கள். இனவாதத்தை அப்பட்டமாக கக்குகின்ற செயற்பாடுகளையே இவ்வரசாங்கம் மேற்கொண்டு வருகின்றதென்றும் தெரிவித்துள்ளார்.