வவுனியாவில் கிணற்றிலிருந்து இளைஞன் சடலமாக மீட்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா - ஓமந்தை பகுதியில் காணாமல் போன இளைஞனொருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்ட்டுள்ளார்.

ஓமந்தையில் நேற்று இரவு முதல் காணாமல் போயிருந்ததாக கூறி தேடப்பட்டு வந்த இளைஞரே இன்று காலை கிணற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா- ஓமந்தை அலகல்லுபோட்டகுளம் பகுதியில் வசித்து வந்த 26வயதுடைய அர்ச்சுணன் அருள்குமார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் காணாமல் போயிருந்த நிலையில் அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டு வளவிலுள்ள தோட்டக்கிணற்றில் தண்ணீர் இறைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டபோது கிணற்றில் அவரது சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் குறித்து ஓமந்தை பொலிஸாருக்கும் அப்பகுதி கிராம அலுவலகருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மரண விசாரணை அதிகாரிக்கு தகவல் வழங்கியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த இளைஞன் மனநலம் குன்றிய நிலையில் சில காலங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.