ஆனையிறவிற்கு படையெடுத்துள்ள தென்பகுதி மக்கள்

Report Print Mohan Mohan in சமூகம்

தென்பகுதியில் இருந்து அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் இன்று ஆனையிறவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஆனையிறவு மற்றும் மந்துவில் இராணுவ வெற்றியிடங்களை பார்வையிடுவதில அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இந்நிலையில் ஆனையிறவு இராணுவ நினைவு தூபி வளாகப்பகுதிகளில் சென்ற சுற்றுலாபயணிகள் அங்கு வைக்கப்பட்டுள்ள இராணுவ வீரரின் சிலைக்கு வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

மேலும் அங்கு சென்றுள்ள மக்களுக்கு 2009 அம் ஆண்டிற்கு முன்னர் ஆனையிறவில் ஏற்பட்ட மோதல்களில தொடர்பிலும், இராணுவத்தினாரின் முறியடிப்பு சாதனைகள் தொடர்பிலும் பக்கச்சார்பாக பிரச்சார கருத்துக்களை இராணுவத்தினர் முன்வைப்பதாக தெரிவிக்கப்டுகின்றது

இதன் காரணமாக ஒரு சமுகத்தினரின் மனங்களில் பக்கசார்பான கருத்துக்கள் விதைக்கப்படுவதாகவும் சமுகங்களிற்கிடையில் ஏற்பட்டிருந்த நல்லிணக்கத்திற்கு பாதகம் ஏற்பட்டுள்ளதாகவும் சமுக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.