பாரிஸின் பிரதான புகையிரத நிலையத்தில் பாரிய தீ விபத்து

Report Print Sujitha Sri in சமூகம்

பாரிஸில் உள்ள பிரதான புகையிரத நிலையமான கரே டி லியோன் புகையிரத நிலையத்தில் இன்று பிற்பகல் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தையடுத்து குறித்த இடத்திலிருந்து பொதுமக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் அந்த பகுதியை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளை தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் தீ விபத்து இடம்பெற்றுள்ள இடத்திற்கு அருகே ஒரு குழுவினரால் தீ வைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் சில தகவல்கள் வைரலாகியுள்ளதுடன், தீயணைப்பு வீரர்களை தீயை அணைக்க விடாமல் தடுக்க சிலர் முயற்சிக்கும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.