117 கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது

Report Print Yathu in சமூகம்
49Shares

கிளிநொச்சியில் 323 கிலோகிராம் எடை கொண்ட 117 பொதி கஞ்சாவினை ஏற்றிய டிப்பர் வாகனத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கமைவாக சோதனை மேற்கொண்டு கடத்தல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.

தமக்கு கிடைத்த தகவலிற்கமைவாக கிளிநொச்சி இராணுவ புலனாய்வுப் பிரிவினர் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து வலைப்பாடு பகுதியில் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

பூநகரி வலைப்பாடு ஊடாக பாரிய கஞ்சா கடத்தல் இடம்பெறுகின்றமை தொடர்பாக கிடைத்த தகவலிற்கமைவாக நள்ளிரவு 12.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே டிப்பர் வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது வாகன சாரதி கைது செய்யப்பட்டார். கைதானவர் வவுனியா மரதன்குளம் பகுதியை சேர்ந்த 47 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

கைதான சந்தேக நபரையும், மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளையும் நாச்சிக்குடா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.