யாழில் மதுபானம் என நினைத்து நச்சுத்திரவத்தை அருந்திய முதியவரொருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
வீட்டு அறையில், விவசாயத்திற்கு தெளிக்க பயன்படுத்தப்படும் நச்சுத் திரவங்களுக்கு அருகில் மதுபானத்தை வைத்திருந்த முதியவர்,கிருமி நாசினியை மதுபானம் என நினைத்து அருந்திய நிலையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் கிளிநொச்சி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதன்போது கிளிநொச்சி - கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை நாகேஸ்வரன் வயது 62 என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.