அவுஸ்திரேலியா செல்ல காத்திருந்த மகனின் அதிர்ச்சிகர முடிவு! கண்ணீருடன் தந்தை வெளியிட்ட தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்

கடந்த வாரம் மத்திய வங்கி கட்டடத்தில் இருந்து குதித்து உயிரிழந்த சிறுவன் பட்டப்படிப்பிற்காக அவுஸ்திரேலியா செல்ல காத்திருந்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் உயர் அதிகாரியின் மகன் ஒருவரே கடந்த வாரம் தற்கொலை செய்துக் கொண்டார்.

மகனின் இறப்பு தொடர்பில் கண்ணீருடன் கருத்து வெளியிட்ட தந்தை,

“எனது மகன் காதல் தொடர்புகள் எதுவும் கொண்டிருக்கவில்லை. அப்படி இருந்தால் நிச்சயம் என்னிடம் கூறியிருப்பார்.

மகன் குடுபத்துடன் மிகவும் அன்பாக நடந்துக் கொள்ளும் ஒருவர். எதனையும் மறைக்க மாட்டார். சம்பவ தினத்தன்று என்னை பார்க்க வந்தார். நான் அலுவலகத்தில் காத்திருக்குமாறு கூறிவிட்டு கூட்டம் ஒன்றிற்கு சென்றுவிட்டேன். எனினும் ஏன் இந்த முடிவிற்கு மகன் வந்தார் என்பது எங்களுக்கு இன்னமும் புரிய வில்லை.

மிகவும் அன்பான இரக்க குணமுடைய மகனின் நினைவுகளால் மீண்டு வர முடியவில்லை. அவர் அவுஸ்திரேலியாவில் பட்டப்படிப்பு மேற்கொள்வதற்கு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். எனினும் திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாம் எங்களது பிள்ளைகளுக்கு எங்கள் நேரத்தை அதிகமாக வழங்க வேண்டும் என நான் நினைக்கின்றேன். நாங்கள் அவர்களின் மனதில் என்ன உள்ளது என அறிய தவறுவதே நாங்கள் செய்யும் தவறாகும்.

பிள்ளைகளுக்கு அதிக அக்கறை செலுத்தி அவர்களின் மணங்களை புரிந்துக் கொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.