சுவிஸ் கூகுள் அலுவலக ஊழியருக்கு கொரோனா

Report Print Steephen Steephen in சமூகம்

சுவிஸர்லாந்தில் உள்ள கூகுள் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சூரிச் நகரில் சேவையாற்றிய ஊழியர் ஒருவருக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக கூகுள் நிறுவனத்தின் இத்தாலி, ஜப்பான், ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் உள்ள அலுவலகங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சீனா முழுவதும் கணனி விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக தொழிநுட்ப தொழிற்துறையில் குறிப்பிடத்தக்களவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.