இலங்கை போக்குவரத்துசபையின் வவுனியா சாலை ஊழியர்கள்,சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா சாலையில் பணியாற்றும் நான்கு ஊழிர்களிற்கு வழக்கத்திற்கு மாறான முறையில் வடமாகாணத்தை புறம்தள்ளி ஏனைய பகுதிகளில் இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்தே குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் இன்று காலை 5 மணிமுதல் வவுனியாவில் இருந்து சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பேருந்துகள் எவையும் சேவையில் ஈடுபடவில்லை.
எனினும் இலங்கை பொதுஜன போக்குவரத்து ஊழியர் தொழிற்சங்கத்தின் தலையீட்டை அடுத்து இடமாற்றங்கள் ரத்து செய்யப்படும் என்று உறுதிமொழி வழங்கப்பட்டதையடுத்து பணிபுறக்கணிப்பு போராட்டம் நிறைவிற்கு வந்ததுடன் பேருந்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது.