கொழும்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது!

Report Print Ajith Ajith in சமூகம்

கொழும்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யபட்டுள்ளனர்.

கொழும்பு - ராஜகிரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 3 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டி ஒன்றில் குறித்த ஹெரோயின் போதைப்பொருள் கொண்டு செல்லப்பட்ட போதே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் சந்தைப்பெறுமதி 30 மில்லியன் ரூபாய் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.