கொழும்பு சிட்டி சென்டர் வர்த்தக கட்டட தொகுதியில் இருந்து கீழே குதித்தமையினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கீழே குதித்த நபர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனளிக்காமையினால் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் தற்கொலை செய்துக்கொண்டமைக்கான உரிய காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.