முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட விமலநாதன்

Report Print Vanniyan in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக விமலநாதன் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் தலைமையில் புதிய அரசாங்க அதிபரை வரவேற்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

முன்னதாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு தனது குடும்பத்தாருடன் சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட அரசாங்க அதிபர் அங்கிருந்து மாவட்ட செயலகம் சென்று கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலதிக அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் காணிப்பகுதி, சமுர்த்தி பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் மற்றும் பொது மக்கள் அமைப்புகள் என பலர் திரண்டு புதிய அரசாங்க அதிபரை வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.