முசலியில் கொங்கிறீட் வீடுகள் அமைக்க அடிக்கல் நாட்டி வைத்த மஸ்தான் எம்.பி.

Report Print Ashik in சமூகம்
33Shares

வட மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய தொழில்நுட்பத்துடன கொங்கிறீட் பனல் மூலம் நிர்மாணிக்கப்படும் வீட்டுத்தொகுதி வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மாதிரி வீடுகள் மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான காதர் மஸ்தானினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கின்' திட்டத்தின் கீழ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் நெறிப்படுத்தலில் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

ஒரு வீடு தலா 12 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் 650 சதுர அடிகளைக் கொண்டதாக அமையப்பெறுகின்றன.

அதற்கமைவாக முசலி பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள பொற்கேணி, ஹீனைஸ் நகர்,சவேரியார் புரம் ஆகிய 3 கிராமங்களிலும் தலா ஒரு வீடுகள் வீதம் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் முசலி பிரதேச செயலாளர் உற்பட அதிகாரிகள், பயனாளிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.