நாவிதன்வெளி பிரதேச செயலத்தில் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்கான இறுதி கட்ட நேர்முகப் பரீட்சைகள்

Report Print Varunan in சமூகம்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிக்கமைவாக ஒரு இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் பலநோக்கு அபிவிருத்தி செயலணி வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு நிறைவடைந்துள்ளன.

அதற்கமைவாக நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சைகள் பிரதேச செயலகத்தில் நான்காவது நாளாகவும் இடம்பெற்று நிறைவடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் தொழில் வாய்ப்புக்காக 1579 இளைஞர், யுவதிகள் விண்ணப்பித்துள்ளனர்.

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ.ரங்கநாதன் வழிகாட்டலில் நிர்வாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இராணுவ மேஜர், கெப்டன் தரத்திலான உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் நேர்முகப் பரீட்சைகள் சிறப்பாக நடைபெற்றிருந்தன.

குறித்த நேர்முகப் பரீட்சைகள் கடந்த புதன்கிழமை ஆரம்பிக்கபட்டு நடைபெற்று வருவதுடன் எதிர்வரும் சனிக்கிழமை நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.