காலி கடற்பரப்பில் பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கடற்படையினரால் மீட்பு

Report Print Banu in சமூகம்

காலி கடற்பரப்பில் சற்றுமுன்னர் கடற்படையினர் 1.2 பில்லியன் ரூபாய் பெறுமதியிலான போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது குறித்த 68 கிலோ ஹெரோயின் மற்றும் 50 கிலோ ஐஸ் வகை போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றின் மதிப்பு இலங்கைப் பெறுமதியில் 1.2 பில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த போதைப்பொருட்கள் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லையெனவும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இலங்கை கடற்படையினர் முன்னெடுத்துள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.