தென்கொரியாவில் மிகவேகமாக பரவும் கொரோனா வைரஸ்

Report Print Ajith Ajith in சமூகம்

ஒரு நாளில் அதிகளவானோர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படும் நாடாக தென்கொரியா மாறியுள்ளது.

அங்கு நாள் ஒன்றுக்கு 594 புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் அடிப்படையில் அங்கு தற்போது 2931 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் சிசிக்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை 17 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர்.

தற்போதைக்கு சீனாவுக்கு அடுத்தப்படியாக தென்கொரியாவே அதிகமான கொரோனா வைரஸ் தொற்றாளர்களை கொண்டுள்ளது.

மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களில் இராணுவம் அனுப்பப்பட்டு கிருமி நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவருகிறது.