போக்குவரத்துப் பொலிசாருக்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கோரிக்கை

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் வீதி விபத்துக்களைக்கட்டுப்படுத்தவும் வீதி விபத்துக்களை குறைப்பதற்கும் சாரதிகள் போக்குவரத்து வழிமுறைகளை கடைப்பிடித்து பொலிசாருக்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு போக்குவரத்துப்பிரிவின் பொறுப்பதிகாரியாக இன்று பதவி உயர் பெற்றுள்ள காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பொலிஸ்மா அதிபரினால் நாடாளாவிய ரீதியிலுள்ள போக்குவரத்துப் பொலிஸ் நிலையங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கையாக வவுனியா போக்குவரத்துப்பிரிவில் உப பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய காமினி திசாயாநக்கவிற்கு இன்று முதல் பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கு பொலிசாருக்கு போதிய ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் போக்குவரத்து வழிமுறைகளைக் கடைப்பிடித்து நடக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.