சுமார் 1180 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

Report Print Ajith Ajith in சமூகம்

சுமார் 1180 மில்லியன் ரூபா பெறுமதியான கிறிஸ்டல் மெத்தபெட்டாமின் மற்றும் ஹெரோய்ன் போதைப்பொருள் என்பன இலங்கை பொலிஸார் மற்றும் கடற்படையினரால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளன.

தென்னிலங்கை காலி கடற்பகுதிக்கு அப்பால் இந்த சட்டவிரோத பொருட்களை பொலிஸின் போதைவஸ்து தடுப்பு பிரிவும், கடற்படையும் இணைந்து கைப்பற்றியுள்ளன.

இதில் 68 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளும், 50 கிலோகிராம் கிறிஸ்டல் மெதம்பேட்டாமின்களும் இருந்துள்ளன.

எனினும் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.