மட்டக்களப்பில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் விபத்திற்கு இலக்காகியுள்ளார்.
இந்த சம்பவம் இன்றைய தினம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளி வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
வீதியை குறுக்கறுத்த பெண்ணுக்கு வழி விடும் போது சைக்கிள் திசைமாறி மின் கம்பத்தில் மோதியதாக விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இளைஞன் ஆபத்தான நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.