கண்டியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக கூறப்படும் போதை அடங்கிய இனிப்பு உணவு ஒன்று தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
6, 7, 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த இனிப்பு பண்டம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
வெளியாரால் வழங்கப்பட்ட இந்த இனிப்பு பண்டத்தை உயர்தர மாணவர்களே அவற்றை குறித்த மாணவர்களுக்கு விநியோகித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இனிப்பு பண்டத்தை உட்கொண்ட 6ம் வகுப்பு மாணவர் ஒருவர் கண்டி பண்டாரநாயக்க வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே இந்த விடயம் வெளியாகியுள்ளது.
சன்டா பிரஷ் என்ற பெயரிலேயே இந்த இனிப்பு பண்டம் பலவந்தமாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.