வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

Report Print Vethu Vethu in சமூகம்
926Shares

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு சமூக பாதுகாப்பு நிதியை நிறுவ அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர். இலங்கைக்கு அந்நிய செலாவணியை கொண்டுவரும் முக்கிய நபர்களாக அவர்களே உள்ளனர்.

எப்படியிருப்பினும், வெளிநாட்டுத் தொழிலாளர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் தங்கள் சமூகப் பாதுகாப்பிற்காக சிறிது பணத்தை சேமிக்க முடியாமல் போகின்றது.

எனவே அவர்கள் ஓய்வூதிய வயதை அடைந்தவுடன் நிதி சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இதற்கு ஒரு தீர்வாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


you may like this video